கட்சி வேலைகள் தற்காலிக நிறுத்தம் - மீண்டும் படபிடிப்பில் கலந்துக் கொள்ளும் உதயநிதி ஸ்டாலின்!

Udhayanidhi Stalin – Kannai Nambathey : தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இறுதியாக ‘கண்ணே கலைமானே’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியிருந்த இந்தப் படத்தில் நடிகை தமன்னா ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி, குடும்ப பட ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.இதனைத் தொடர்ந்து ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ பட

இயக்குநர் மு.மாறனின் அடுத்தப் படத்தில் கடந்த பிப்ரவரியில் கமிட்டானார் உதயநிதி. இந்தப் படத்திற்கு ‘கண்ணை நம்பாதே’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.இந்நிலையில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பிரச்சாரங்களில் படு பிஸியானார் உதயநிதி. இதனால் படபிடிப்புக்கு சற்று பிரேக் விட்டு விட்டு கட்சிப் பணிகளை கவனித்தார்.

Udhayanidhi Resumes his shooting for Kannai Nambathey

இதற்கிடையே தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிந்து  வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதனால் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் மீண்டும் படபிடிப்பில் கலந்துக் கொள்ள திட்டமிட்டிருக்கிறாராம் உதய். ஆத்மிகா, சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு இசை சாம்.சி.எஸ்.தவிர, உதயநிதியின் ‘சைக்கோ, ஏஞ்சல்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments