’பிக் பாஸ்’ ஆரவுக்கு ஜோடியான நிகிஷா படேல்!

பிக் பாஸ் முதல் சீசனின் வெற்றியாளரான ஆரவ், தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாகிவிட்டார். ‘ராஜ பீமா’, ‘மார்கெட் ராஜா MBBS' ஆகிய படங்களில் நடித்து வருபவருக்கு மேலும் சில பட வாய்ப்புகளும் வருகிறதாம். 
இதில், ‘மார்கெட் ராஜா MBBS’ படத்தை அஜித்தை வைத்து பல வெற்றிப் படங்களை கொடுத்த சரண் இயக்குவதால் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆரவுக்கு ஜோடியாக நிகிஷா படேல் நடிக்க, முக்கிய வேடத்தில் ராதிகா நடிக்கிறார்.
 
இப்படத்தில் நடிப்பது குறித்து நடிகை நிகிஷா படேல் கூறுகையில், “நான் இந்தபடத்தில் ஆரவ் உடைய காதலியாக நடித்திருக்கிறேன்  மேலும் படத்தில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நான் ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். இயக்குநர் சரண் என்னை மிகவும் ஃபேஷனான கதாபாத்திரத்தில் வடிவமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் K.V குகன் தனது வேலையை அருமையாக செய்துள்ளார்.” என்றார்.
 
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் நிகிஷா படேல், ‘மார்கெட் ராஜா MBBS’ படத்துடன் மேலும் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். அப்படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருப்பவர், சமீபத்தில் தான் டீ-சீரிஸின் இந்தி இசை ஆல்பத்திலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments