மேற்கு வங்கத்திலிருந்து எம்பியாகி இருக்கும் 2 இளம் நடிகைகளுக்கு வரவேற்பு குவிகிறது. இயக்குனர் ராம் கோபால்வர்மா வாவ் வாவ் என பாராட்டி உள்ளார். நடந்து முடிந்த 17வது நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரினாமுல் காங்கிரஸ் சார்பில் இளம் நடிகைகள் மிமி, நுஸ்ரத் போட்டியிடு வெற்றி
பெற்றுள்ளனர். பாசிஸ்ஹாட் தொகுதியில் போட்டியிட்ட மிமி 2,95,239 ஓட்டு வித்தியாசத்திலும், ஜாதவ்புர் தொகுதியில் போட்டியிட்ட நுஸ்ரத் தன்னை எதிர்த்து போட்டியிட்டவரைவிட 3,50,396 வாக்குகள் அதிகம் பெற்றும் வெற்றி பெற்றனர்.

இளம் நடிகைகளான இவர்கள் இருவரும் எம்.பிக்களாகியிருப்பது நெட்டில் வைரலாகி வருகிறது. அவர்களது அழகுப் படங்களை பதிவிட்டு ரசிகர்கள் ருசிகரமான கமென்ட் பகிர்ந்து வருகின்றனர். இதுபற்றி பதிவிட்டுள்ள திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா, ‘வாவ் வாவ் வாவ், வங்கத்திலிருந்து புது எம்பிக்கள். மிமி சக்ரபோர்த்தி மற்றும் நுஸ்ரத் ஜஹான். இந்தியா உண்மையிலேயே முன்னேறியிருக்கிறது.... இந்த அழகிகளை எம்பிக்களாக பார்க்கும்போது கண்களுக்கு ஒரு ரிலீப் கிடைக்கிறது’ என பதிவிட்டுள்ளார்
Comments
Post a Comment