பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பாக இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்துள்ள படம் 'ஆர்.கே நகர்'. இந்த படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சனா நடித்துள்ளார்.மேலும் இவர்களுடன் இனிகோ பிரபாகரன், சம்பத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்துக்கு பிரேம்ஜி இசையமைக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். சரவண ராஜன் இந்த படத்தை இயக்கியுள்ளார். கே.எல். பிரவீன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படம் கடந்த மாதம் வெளியாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்த படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இதுகுறித்து அப்போது வெங்கட் பிரபு ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் வெங்கட்பிரபு இப்போது ட்விட்டர் பக்கத்தில் இந்த படம் குறித்து பதிவிட்டுள்ளதில், 'சில கஷ்டங்களுக்கு பிறகு அன்பு மற்றும் ஆதரவால் 'ஆர்கே நகர்' ஜூன் மாதம் வெளியாகிறது. தேதி குறித்து விரைவில் அறிவிப்போம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இப்போது இயக்கி வரும் படம் 'மாநாடு. இந்த படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார்.
Comments
Post a Comment