கமலஹாசனின் பேச்சு முட்டாள் தனமானது : காயத்திரி ரகுராம்!

மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசும் கமல்ஹாசனின் பேச்சு முட்டாள் தனமானது என நடிகை காயத்திரி ரகுராம் கடுமையாக தாக்கி உள்ளார்.இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- இந்து மதத்திற்கு எதிராகவும், கலவரத்தை தூண்டும் வகையிலும் கருத்துக்களை கூறி வரும் கமல்ஹாசனின் பேச்சு முட்டாள் தனமானது.
இவரைப்போல் மு.க.ஸ்டாலின், வீரமணி, திருமாவளவன் ஆகியோரும் பேசி வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இப்படி பேசாமல் அமைதியாக இருந்தனர். அப்படியே பேசி இருந்தாலும் அதன் நடவடிக்ககைள் கடுமையா இருந்திருக்கும்.எனவே ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி இவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு காயத்திரி ரகுராம் கூறியுள்ளார்.

Comments