திருசியம், ‘பாபநாசம்’ படப் புக்ழ ஜித்து ஜோசஃப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு கடந்த (ஏப்ரல்) மாதம் 27-ஆம் தேதி கோவாவில் துவங்கியது. இந்த படத்தில் ஜோதிகா கார்த்தியின் அக்காவாக நடிக்க, இவர்களுடன் சத்யராஜ், ஆன்சன் பால், இளவரசு, ஹரீஷ் பேரடி ஆகியோர் நடித்து வருகிரார்கள். இந்நிலையில் இந்த படத்தில் ‘வெற்றிவேல்’,
‘கிடாரி’ ஆகிய படங்களில் சசிகுமார் ஜோடியாக நடித்த நிகிலா விமலும் இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது ஊட்டியில் நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் நிகிலா விமல் இணைந்துள்ள தகவலை கார்த்தி ஒரு ட்வீட்டின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். VIACOM 18 STUDIOS வழங்க, PARALLEL MINDS PRODUCTIONS நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்தியும், ஜோதிகாவும் முதன் முதலாக இணைந்து நடிக்கும் இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள்து
Comments
Post a Comment