நடிகைகள் குஷ்பு - காயத்ரி ரகுராம் டுவிட்டர் சண்டை!

பாஜகவில் இடம்பெற்றுள்ள நடிகை காயத்ரி ரகுராம், சமீபத்தில் அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரான தமிழிசை செளந்திரராஜனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, பாஜகவில் இருந்து வெளியேறுவதாக டுவிட்டரில் பதிவிட்டார். அதையடுத்து அரசியல் பயின்று வந்து அதிரடியாக அரசியலில் பிரவேசிப்பேன் என்று மீண்டும் டுவீட் செய்தார்.

இந்த நிலையில், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை தனது டுவிட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளார் காயத்ரி ரகுராம். அதாவது, முதலில் உங்கள் அமேதி தொகுதிக்கு ஏதாவது செய்து விட்டு பின்னர் ஓட்டு கேளுங்கள். பாவம் வயநாடு மக்கள் பொய் சொல்லியே ஓட்டு வாங்க முடியாது. உங்களுடைய பொய்களை இந்தியா நம்பாது. உங்களுடைய செண்டிமென்ட் பொய்களை தமிழக மக்கள் நம்பி விட்டனர். வேறு எங்காவது போய் முயற்சி செய்யுங்கள் என்று ராகுல்காந்தி, குஷ்பு ஆகியோருக்கு டேக் செய்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்..இதற்கு குஷ்புவும் ஒரு டுவீட் போட்டுள்ளார். அதில் காயு கண்ணா சீக்கிரம் உடல்நலம் சீராகி வா -என்று பதிவிட்டுள்ளார்.

Comments