மும்பை: நடிகர் இஷான் கட்டாரும், நடிகை தாரா சுதாரியாவும் காதலிப்பதாக கூறப்படுவது குறித்து ஜான்வி கபூரிடம் கேட்கப்பட்டது. ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தான் நடித்த முதல் படமான தடக்கின் ஹீரோ இஷான் கட்டாரை காதலிப்பதாக பேசப்படுகிறது. இருவரும் ஜோடியாக வெளியே செல்கிறார்கள். இந்நிலையில் நடிகை நேஹா தூபியா நடத்தும் டிவி நிகழ்ச்சியில் ஜான்வி தனது தங்கை குஷி கபூருடன் கலந்து கொண்டார்.
நான் எந்த பையனுடன் வெளியே போகலாம் என்பதை அப்பா கண்காணிப்பார். நான் அந்த அளவுக்கு யாருடனும் வெளியே செல்வது இல்லை என்றார் ஜான்வி. அப்படி என்றால் உங்களின் அப்பா இஷான் பற்றி என்ன நினைக்கிறார் என்று கேட்டதற்கு வெட்கப்பட்டுக் கொண்டே இஷான் நல்ல நடிகர், நல்ல பையன் என்று நினைக்கிறார் என்றார்.
இஷான் கட்டாரும், நடிகை தாரா சுதாரியாவும் காதலிப்பதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது. இது குறித்து நேஹா ஜான்வியிடம் கேட்டதற்கு அவர் பதில் சொல்லாமல் நைசாக நழுவிவிட்டார். சக நடிகரை காதலிக்கிறீர்களா என்ற கேள்விக்கும் ஜான்வி பதில் அளிக்கவில்லை.
முன்னதாக ஜான்வி காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டோது இஷான் கட்டாரை காதலிக்கிறீர்களா என்று கரண் ஜோஹார் கேட்டார். அதற்கு இல்லை என்றார் ஜான்வி. ஆனால் தாரோவோ, இஷானை சிறுவயதில் இருந்தே தெரியும் என்றார்.
இஷான் நல்ல நண்பர் மட்டுமே என்று கூறி வரும் ஜான்வி அவரை குடும்பத்தில் ஒருத்தராக நினைப்பதற்கு இந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் தான் சாட்சி. பாலிவுட்டில் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று கூறினால் அது காதல் தான் என்கிறார்கள் ரசிகர்கள்.
Comments
Post a Comment