தளபதி 64 படத்தை மாநகரம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள்!

தளபதி 64 படத்தை மாநகரம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது மெர்சல், தெறி படங்களுக்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் அட்லீ கூட்டணியில் தயாராகி வரும் படம் தளபதி 63. இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு,
இந்நிலையில் தளபதி 63 படத்தை தொடர்ந்து மாநகரம் புகழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடிக்க உள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் தற்போது கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கி வருகிறார். தளபதி 64 படத்தின் அதிகார்ப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார்.

Comments