விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் விஜய்யின் 63வது படத்தின் தமிழ்நாட்டு உரிமை நிறைவு?

எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் தலைப்பிடப்படாமல் உருவாகி வரும் விஜய்யின் 63வது படத்தின் தமிழ்நாட்டு உரிமை வியாபாரம் நிறைவுற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தின் உரிமையை ஸ்கிரீன் சீன் என்று வினியோக நிறுவனம் சுமார் 60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிறுவனம் 'சண்டக்கோழி 2, தடம், அயோக்யா' உள்ளிட்ட படங்களை வெளியிட்டுள்ளது. 'தேவி 2' படத்தையும் வெளியிட உள்ளது. ஜெயம் ரவி நடிக்க உள்ள மூன்று படங்களையும் இந்நிறுவனம் தயாரிக்க உள்ளது.

விஜய் 63 படத்தின் தமிழ்நாட்டு உரிமை படப்பிடிப்பில் இருக்கும் போதே விற்கப்பட்டுள்ளது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடித்து இதுவரை வெளிவந்துள்ள படங்களிலேயே இந்தத் தொகை மிகப் பெரும் தொகை என்கிறார்கள்.

Comments