60 வயது பாட்டி திடீரென 20 வயது பேத்தியாக மாறிவிட என்னென்ன பிரச்சனைகள் நடக்கிறது என்பதை ஜாலியாக சொன்ன ‘மிஸ்கிராணி’ படம் தற்போது தெலுங்கில் ஓ பேபி’ என்ற பெயரில் உருவாகி உள்ளது.நந்தினி ரெட்டி இயக்கி உள்ள இந்த படத்தில் பாட்டியாக மூத்த நடிகை லட்சுமியும்,
பேத்தியாக இளம் நடிகை சமந்தாவும் நடித்துள்ளனர். இந்த படத்திற்காக தனது டுவிட்டர் அக்கவுண்டில் பேபி சமந்தா என மாற்றி வைத்துள்ளார்.இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஜூன் மாதம் படம் வெளியாக உள்ளது. தமிழில் டப் செய்து வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். இதே கதையை மையமாக வைத்து சமீபத்தில் பேரழகி ஐஎஸ்ஓ என்ற படம் வெளி வந்தது. இதில் பாட்டியாக சச்சுவும், பேத்தியாக சில்பா மஞ்சுநாத்தும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment