பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிக்கும் திரைப்படம் கோமாளி , இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்திருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு, பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம், ஆர்.ஜே ஆனந்தி மற்றும் பலர் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் அதி இசை அமைக்கிறார்.
‘கோமாளி’ படத்தில் 9 வேடங்களில் ஜெயம் ரவி நடித்து வரும் இந்த படத்தின் 4 போஸ்டர்கள் இதுவரை வெளியாகியுள்ளது. அனைத்தும் ரசிகர்களிடம் வைரலாகி பிரபலமானது.இந்நிலையில் இந்த படத்தின் 5வது போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை இசையமைப்பாளர் இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் நடிகர் ஜெயம் ரவி ராஜா போன்ற தோற்றத்தில் சுற்றி அழகிகளுடன் உள்ளார்.
Comments
Post a Comment