பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்கள்!!!

Bigg Boss தமிழ் வரும் ஜூன் மாதம் அன்று வெளிவர இருக்கிறது என்று அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது அதில் பெரும் சுவாரசியமாக மக்கள் எதிர்பார்ப்பது என்வென்றால் பிக்பாஸ் போட்டியாளர்கள் தான். மக்கள் அனைவரும் பிக்பாஸ் போட்டியாளர் யார்? என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளனர் அதில் நமக்கு கிடைத்த தகவலின் படி நான்கு போட்டியாளர் இவர்கள் தான் 
 
  • சாக்‌ஷி அகர்வால் (வெள்ளித்திரை நடிகை)
  • ஆல்யா மானஸா (சின்னத்திரை நடிகை)
  • எம்.எஸ்.பாஸ்கர் (வெள்ளித்திரை நடிகர்) 
  • சாக்ஷி (திருநங்கை பாடகி)
சாக்‌ஷி அகர்வால்:
இவர் இந்தியாவில் உள்ள உத்ராஞ்சல் என்ற ஊரில் பிறந்தார், அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் மேலும் பெங்களூரு Xavier Institute of Management and Entrepreneurship என்ற கல்லுரியில் MBA படிப்பில் முதலிடம் பிடித்தார். படிப்பு முடிந்தபின் MNC நிறுவனம் ஒன்றில் Business Consultant- ஆக பணியாற்றி வந்தார் பின்னர் சாக்‌ஷி பேரார்வம் கொண்ட திரையுலகத்துறையை தேர்ந்தெடுத்து, பெங்களுரு மாடலிங் நிறுவனம் ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார்.  இவர் இரண்டு கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இப்போது தமிழ் மொழி மற்றும் மலையாள மொழி படங்களில் சிறப்பாக பணியாற்றி வருகின்றார். பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இவர் கடும் போட்டியாக இருக்கலாம்.
ல்யா மானஸா:ஆரம்ப காலத்தில் ஆல்யா சிறிய கிராமங்களில் மேடை நடனம் ஆடிவந்துள்ளார். பிறகு கலைஞர் தொலைக்காட்சி, மானாட மயிலாட சீசன் 10  நடன நிகழ்ச்சியில் பங்கேற்று மனாஸ்க்கு ஜோடியாக வந்துள்ளார் ராஜா ராணி நாடகத்தில் பிரபலம் அடைந்த ஆல்யா நடனத்தில் பேரார்வம் கொண்டவர். இவரின் வாழ்க்கை கதை பலருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பிக்பாஸ் சீசன் 3 இவருக்கு வெற்றிப் பயணமாக மக்கள் வாழ்த்துகின்றனர்.

எம்.எஸ்.பாஸ்கர்:
தியேட்டர் கலைஞராக தன் வாழ்க்கையை தொடங்கியவர் எம்.எஸ்.பாஸ்கர். இவரின் முதல் திரைப்படம் 1987ல்  வெளிவந்த "திருமதி ஒரு வெகுமதி" என்ற திரைப்படம் தான். அதில் ஒரு சிறு வேடம் நடித்து இப்போது திரையுலகில் பெரும் துணை நடிகராக மற்றும் நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். "எங்கள் அண்ணா|" திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இவர் பிக்பாஸ் வந்தால் மக்களின் பெரும் ஆதரவை பெற்றுவிடுவார்.
சாக்ஷி:
இவர் ஒரு திருநங்கை. பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பாடல் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் இவர் இப்போது பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளராக வரப்போகிறார் என்று அதிகாரபூர்வமான தகவல் வெளிவந்துள்ளது.

Comments