ஜெயம் ரவியின் 25வது படத்தில் பாலிவுட் வில்லன் ரோனித் ராய் யுடன் மோதும் ஜெயம்ரவி!

ஜெயம் ரவியின் 24வது படமான கோமாளி தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அவரது 25வது படத்தை ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லக்ஷ்மண் இயக்குகிறார். சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். ஜெயம் ரவியின் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகப்போகும் படம்.

இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியா பாலிவுட் நடிகை நித்தி அகர்வால் நடிக்கும் செய்திகள் சமீபத்தில் வெளியானது. இப்போது ஜெயம் ரவியோடு மோதப் போகும் வில்லன் ரோனித் ராய் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ரோனித் ராய் தென்னிந்திய மொழிகளில் அதிகம் நடித்திராத பாலிவுட் நடிகர்.

ஒரே ஒரு தெலுங்கு படத்தில் மட்டும் நடித்திருந்தார். சிறந்த வில்லன் நடிகராக பல விருதுகளை வாங்கியவர். தக்ஸ் ஆப் இந்துஸ்தான் படத்தில் கடைசியாக வில்லனாக மிரட்டி இருந்தார். தற்போது ஜெயம்ரவி படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். ஜெயம்ரவியின் 25வது படம் விவசாயத்தை மையமாக கொண்ட சமூக அக்கறையுள்ள படம் என்கிறார்கள். அதில் ரோனித் ராய் கார்பரேட் கம்பெனி சேர்மனாக நடிக்கிறார் என்று பட வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கிறது.

Comments