சமீபத்தில் வெளியான ‘தில்லுக்கு துட்டு-2’ படத்தை தொடர்ந்து சந்தானத்தின் புதிய பட அறிவிப்பு!

சமீபத்தில் வெளியான ‘தில்லுக்கு துட்டு-2’ படத்தை தொடர்ந்து சந்தானம் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ‘ ஜெயம் கொண்டான்’, ‘சேட்டை’, ‘இவன் தந்திரன்’ சமீபத்தில் வெளியான ‘பூமராங்’ உட்பட்ட சில படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்குகிறார். முழுக்க முழுக்க காமெடி எண்டர்டெயின்மெண்ட் படமாக உருவாக இருக்கும்
இந்த படத்தை இயக்குனர் கண்ணனின் ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனமும், எம்,.கே.ராம்பிரசாத்தின் ‘MKRP PRODUCTIONS’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் சந்தானத்துடன் நடிக்க இருக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வுகள் முடிவடைந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஜூலை மாதம் துவங்கும் என்றும் இப்படத்தை வருகிற டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 
‘தில்லுக்கு துட்டு-2’ படத்தை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் படங்கள் ‘
சர்வர் சுந்தரம்’, ‘A1’, ஓடி ஓடி உழைக்கணும், ‘மன்னவன் வந்தானடி’ முதலானவை! இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments