கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா, லதா ஆகியோர் நடித்து 1979-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் நீயா. தனது இணையை கொன்றவர்களை இச்சாதாரி என்ற பெண் பாம்பு எப்படி பழிவாங்குகிறது என்பது கதை. இதில் ஸ்ரீப்ரியா இச்சாதாரி பாம்பாக நடித்து அவரே படத்தை தயாரித்திருந்தார். இந்தப் படத்துக்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற நான் கட்டில் மேலே கண்டேன்
வெண்ணிலா, ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா ஆகிய பாடல்கள் பெரும் வெற்றிபெற்றன.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் நீயா-2 என்ற பெயரில் தற்போது உருவாகியுள்ளது. இதில் ஜெய், வரலட்சுமி சரத்குமார், ராய் லட்சுமி, கேத்தரின் தெரெசா ஆகிய 3 கதாநாயகிகளுடன் நடித்துள்ளார். இயக்குநர் எல்.சுரேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். முந்தைய பாகத்திற்கும், இந்த புதிய படத்திற்கும் கதையில் எந்த தொடர்பும் இல்லை. எனினும் இரண்டுமே பாம்பின் பழிவாங்கலை மையப்படுத்தியே தயாராகியுள்ளது. படம் மார்ச் மே 24-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment