1௦௦’ படத்தின் தனித்தன்மை இதுதான் ; அதர்வா வெளியிட்ட ரகசியம்!

அதர்வா, ஹன்சிகா நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘1௦௦’. விக்ரம் வேதா புகழ் சாம் சி.எஸ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். ஆரா சினிமாஸ் மகேஷ் தயாரித்துள்ள இந்தப்படம் வரும் மே-9ஆம் தேதி திரைக்கு வருகிறது, இதை முன்னிட்டு படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இந்த நிகழ்வில் பேசிய அதர்வா, “போலீஸ் படங்கள் என்றாலே அதில் வித்தியாசம் அகாட்டியாகவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. நம் நாட்டில் எந்த மூலையில் குற்றங்கள் நடந்தாலும் முதலில் அழைப்பது 1௦௦ என்கிற எண்ணிற்குத்தான். எதிர்முனையில் இருப்பவர் என்ன ஆபத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்து அவர்களுக்கு தைரியமூட்டி அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உதவிகளை மேற்கொள்ள வேண்டிய முக்கியமான பொறுப்பு அந்த அழைப்பை ஏற்கும் காவல்துறை அதிகாரிக்கு இருக்கிறது.
 
அப்படிப்பட்ட பணியில் இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரி இந்த பணியில் சந்திக்கும் சவால்கள், எதிர்கொளும் இன்னல்கள் ஆகியவற்றை வித்தியாசமாக இந்தப்படத்தில் காட்டியுள்ளோம்” என்றார்..

Comments