செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘NGK’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘NGK’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுடன் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார். படத்தின் டப்பிங் உட்பட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியிருப்பதால்
இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளும் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் ‘NGK’ படம் உலகம் முழுக்க மே 31-ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு சற்று முன் ட்வீட் செய்துள்ளார். கோடை விடுமுறை மற்றும் ஜூன் 5-ஆம் தேதி வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மே 31-ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘NGK’ செல்வராகவனும் சூர்யாவும் முதன் முதலாக இணைந்துள்ள படம் என்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Comments