அருள்நிதி நடிப்பில் வரும் மே-1ம் தேதி ரிலீசாக இருக்கும் படம் K13. இந்த படத்தை அவரது பரத் நீலகண்டன் என்பவர் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இந்த படத்திற்கு K13 என ஆரம்பத்தில் டைட்டில் அறிவிக்கப்பட்டதும் அது ஏதோ தற்காலிக டைட்டில் என்றே பலரும் நினைத்தார்கள்.
ஆனால் உண்மையிலேயே படத்தின் கதைக்கு தேவையான டைட்டில் என்பதால் தான் இதை வைத்துள்ளார்களாம். குறிப்பாக K பிளாக்கில் உள்ள 13 ஆம் நம்பர் வீட்டில் நடைபெறும் நிகழ்வுகளும் ஒரே நாளில் நடக்கும் கதையும் தான் இந்த மொத்தப்படமும்.. ஆனாலும் இந்த படத்தின் திரைக்கதையில் வித்தியாசம் காட்டியிருக்கிறாராம் இயக்குனர் பரத் நீலகண்டன்.
Comments
Post a Comment