கார்த்தி-ஜோதிகா படம் துவங்கியது!!

தேவ் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது மலையாளத்தில் திரிஷ்யம், தமிழில் பாபநாசம் உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் ஜீத்து ஜோசப் இந்த படத்தை இயக்குவதன் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். அதுமட்டுமல்ல இந்த படத்தில் ஜோதிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கார்த்தியும் அவரது அணியான ஜோதிகாவும் முதன்முதல் இணைந்து நடிக்கும் படம் இது. இந்த படத்தில் இருவரும் உடன் பிறந்தவர்களாக நடிக்கின்றனர். இவர்கள் தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள கார்த்திக் முதன்முறையாக அண்ணியுடன் இணைந்து சினிமாவில் நடிப்பது திரில்லிங்காக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
வயாகம்18 ஸ்டூடியோஸ்’ நிறுவனமும் ‘பேரலல் மைண்ட்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் நேற்று கோவாவில் துவங்கியது.இந்தப் படத்தில் நடிகர்  கார்த்தி நாயகனாக நடிக்கிறார். கார்த்திக்கு அக்காவாக நிஜத்தில் அவரது அண்ணியான ஜோதிகா நடிக்கிறார்.
மேலும், நடிகர் சத்யராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் மலையாள நடிகர் ஆன்சன் பால்  மற்றும் சிலரும் நடிக்கவுள்ளனர்.
 
கோவிந்த் வசந்த் இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ‘திருஷ்யம்’, ‘பாபநாசம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஜீத்து ஜோசப், இந்தப் படத்தை இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நேற்று தொடங்கியது. 2019 அக்டோபரில் படம் வெளியாகவுள்ளது.

Comments