இரண்டே நாளில் இவ்வளவு கோடியா? பட்டையை கிளப்பும் அவெஞ்சர்ஸ் வசூல் வேட்டை!

அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ இயக்கியுள்ள அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்தின் திரைக்கதையை கிறிஸ்டோஃபர் மார்கஸ் மற்றும் ஸ்டீஃபன் மெக்ஃப்லீ இணைந்து உருவாக்கியுள்ளனர். இப்படம் சர்வதேச அளவில் 46 நாடுகளில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது.
ஐக்கிய நாடுகளில் வெளியான முதல் நாளில் 104 கோடி ரூபாய் வருவாயை இத்திரைப்படம் ஈட்டியுள்ளது. சர்வதேச அளவில் சீனா தான் வசூலில் முதலிடத்தில் உள்ளது. சீனாவில் முதல் நாள் வசூலாக 747 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

ஹாலிவுட்டின் மிகப் பிரபலமான நடிகர்கள் பட்டாளமே குவிந்திருக்கும் இப்படத்தின் இரண்டு நாள் வசூல் மட்டும் 2,130 கோடி என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
 
நேற்று இப்படம் தமிழகத்தில் வெளியானது
அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ அவெஞ்சர்ஸ் இயக்கியுள்ளனர்
சர்வதேச அளவில் சீனா தான் வசூலில் முதலிடத்தில் உள்ளது

Comments