இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கதை, எழுதி இசை அமைத்து தயாரித்துள்ள படம் ‘99 சாங்ஸ்’. அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படத்தை ஜூன் 21-ஆம் தேதி வெளியிட இருக்கிற தகவலை சில நாட்களுக்கு முன் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டிருந்தார். விஸ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி திரைக்கதை அமைத்து இயக்கியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாக..
இருக்கும் நிலையில் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பவர் குறித்த விவரங்களை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார். அதில் அவர் பெயர் 'ஈஹான் பட்' என்றும் இவரை உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்’ என்று பதிவு செய்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்! ‘இளம் காதலை அடிப்படையாகக்கொண்ட இந்த படத்தை ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஒய் எம் மூவிஸ்' உடன் ‘ஜியோ ஸ்டுடியோஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment