மீண்டும் இசைஞானியுடன் இணைந்த காந்தக்குரலார்!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் பாடகர், காந்தக்குரலார் என்று அனைவராலும் போற்றப்படுபவருமான கே.ஜே.ஜேசுதாஸ்( KJ Yesudas) நீண்ட நாள்  இடைவெளிக்கு பின் மீண்டும் ஒரு படத்தில் ஒரு பாடல்  பாடியுள்ளார்...
விஜய் ஆண்டனி(Vijay Antony), ரம்யா நம்பீசன்(Ramya Nambeesan) ஜோடியாக இணைந்து  நடித்து வரும் 'தமிழரசன்' படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்நிலையில் இந்த படத்தில் இசைஞானி இளையராஜா(Isaignani Ilayaraja) இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் "புயலென வா” என்ற புரட்சிகரமான பாடலை  பாடியுள்ளார்.

நீண்ட நாள்  இடைவெளிக்கு பின் மீண்டும் பாட வந்த  ஜேசுதாஸுக்கு பூங்கொடுத்து கொடுத்து இளையராஜாவும் மற்றும் இந்த படத்தின் இயக்குனர் பாபு யோகேஸ்வரன், சிவா ஆகியோர்களும்  வரவேற்றனர். சென்ற  ஆண்டு 'கேணி' என்ற படத்தில் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்பிபி அவர்களுடன் ஒரு பாடலை பாடினார் , அதன் பின் இந்த படத்தில் தான் பாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், சுரேஷ்கோபி ராதாரவி, சோனு சூட், யோகிபாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ்
இப்படம் இளையராஜா இசையில், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் புவன் சந்திரசேகர் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது

இவர்களின் கூட்டணியில் உருவாகும் இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது 

Comments