சூர்யாவின் சமகால போட்டியாளரான நடிகர் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் ஒரு படம் குறித்த முன்பே அடுத்த படம் குறித்த தகவல்களை வெளியிட்டு வருகின்றனர் ஆனால் சூர்யாவின் ஒரு படம் தயாரிப்பில் இருக்கும் போதே அடுத்த இரண்டு படங்களில் அறிவிப்புகள் வெளியாவது வாடிக்கையான ஒன்று தான்.
அந்த வகையில் என்.ஜி.கே மற்றும் காப்பான் ஆகிய படங்களை முடித்துவிட்டு, தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்துவரும் சூர்யா அடுத்ததாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.
ஏற்கனவே யூகமாக சொல்லப்பட்டு வந்த இந்த செய்தி தற்போது இந்த படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோகிரீன் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரம் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.
செல்வராகவனின் டைரக்ஷனில் என்ஜிகே மற்றும் கே.வி.ஆனந்த் டைரக்சனில் காப்பான் என இரண்டு படங்களை முடித்து ரிலீசுக்கு தயார் நிலையில் வைத்து இருக்கிறார் சூர்யா.
Comments
Post a Comment