சர்கார் படத்தில் தமிழக அரசை பற்றி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவர் கொண்டுவந்த திட்டங்கள் பற்றியும் அவதூறாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, ஆளுங்கட்சியினர் சர்கார் படம் திரையிட்டுள்ள பல இடங்களில் படத்தை ஓடவிடாமல் தருத்து நிறுத்தியும், பேனர்களை கிழித்தும், அராஜாகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தநிலையில் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் இருவருமே இந்த செயலை கண்டித்துள்ளனர்.
இது குறித்து ரஜினி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என கூறியுள்ளார்.
அதேபோல கமல் தான் . வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல. விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும். அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்” என கூறியுள்ளார்..
Comments
Post a Comment