Tags : Sivalinga New Movie Photos, Sivalinga Latest Movie Gallery, Sivalinga Unseen Movie Pictures, Sivalinga Film Latest images, Sivalinga Movie Hot Stills, Sivalinga Movie New Pics.
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ்-ரித்திகாசிங் இணைந்து நடித்துள்ள ‘சிவலிங்கா’ வரும் ஏப்-14ஆம் தேதி ரிலீஸாகிறது..ஏற்கனவே கன்னடத்தில் 80 தியேட்டர்களில் நூறு நாட்கள் ஓடி ஹிட்டடித்த கதை.. தமிழுக்கு ஏற்றவாறு லைட்டாக பட்டி டிங்கரிங் பார்த்து செதுக்கியுள்ளார்.
பி.வாசுவை பொறுத்தவரை ரசிகர்களை நூறு சதவீதம் படத்தை ரசிக்கவைக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதில் கரைகண்ட வித்தகர்.. சிவலிங்கா ஹாரர் படம் என்றாலும் கூட, அதில் காமெடி ஏரியாவும் கலாட்டாவாக இருக்குமாம். நீண்ட நாளைக்குப்பின் வடிவேலுவை இந்தப்படத்தில் நடித்தே ஆகவேண்டும் என உள்ளே இழுத்து வந்திருக்கிறார் பி.வாசு. குறிப்பாக வடிவேலு-ஊர்வசி காம்பினேஷன் சிவலிங்கா’வின் ஹைலைட்டுகளில் ஒன்றாக இருக்குமாம்.
இதுபற்றி இயக்குனர் பி.வாசு சொல்லும்போது, “வடிவேலுவை எப்படியாவது நடிக்க வைக்கனும் என நினைத்தேன். அப்புறம் அவரிடம் கதையை சொல்லி நடிக்க வைத்தேன். இந்த படத்தில் காமெடி மட்டுமின்றி கேரக்டரும் பண்ணியிருக்கிறார். சந்திரமுகி மாதிரி காமெடி பண்ணியிருக்கிறார் வடிவேலு. ‘வரும்.. ஆனா வராது’, மாப்பு வச்சிட்டியே ஆப்பு’ என்பது போல் இந்த படத்திலும் வடிவேலு ஒரு டயலாக் பேசியிருக்கிறார். அதுவும் ஹிட்டாகும்” என்கிறார் உறுதியாக..
அதற்குத்தானே ‘வி ஆர் வெயிட்டிங் சார்’….
Comments
Post a Comment