Palli Paruvathiley Movie Stills! சிற்பியின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் ‘பள்ளிப்பருவத்திலே!

Tags : Palli Paruvathiley New Movie Photos, Palli Paruvathiley Latest Movie Gallery, Palli Paruvathiley Unseen Movie Pictures, Palli Paruvathiley Film Latest images, Palli Paruvathiley Movie Hot Stills, Palli Paruvathiley Movie New Pics






































பெரிய படம் போல தெரியும் சின்னப்படம் என்று சொல்வார்களே அந்தவகையில் மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியை பக்கபலமாக கொண்டு புதுமுகங்களை நாயகன் நயாகியாக கொண்டு உருவாக்கி வரும் படம் தான் பள்ளிபருவத்திலே’. பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக வெண்பா நடிக்கிறார். இவர் கற்றது தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.
 
முக்கிய கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி, ஆர்.கே.சுரேஷ் தம்பிராமய்யா, கஞ்சாகருப்பு பொன்வண்ணன், பேராசிரியர் ஞானசம்மந்தம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கலகலப்பான குடும்ப சூழலையும், பள்ளி மாணவர்களையும் மையப்படுத்தி அமைக்கப்பட்ட காமெடி கலந்த, காதல் கதை தான் இந்த ‘பள்ளிபருவத்திலே’ என்கிறார் இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர். .படத்தின் படப்பிடிப்பு ஐம்பது நாட்கள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஓரத்தநாடு, ஆம்பலாபட்டு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்தது.
 
கே.எஸ்.ரவிகுமாரிடம் நான் கதை சொன்னதும், முழுக்கதையையும் கேட்டு விட்டு.. இது என்ன விருதுக்காக எடுக்கிற படமா என்று கேட்டார். அப்போது, இதே வார்த்தையை தான் கவிப்பேரரசு வைரமுத்துவும் என்னிடம் சொன்னார் என்று கே.எஸ்.ரவிகுமார் சாரிடம் கூறினேன். இவர்கள் இருவரும் சொன்னதே எனக்கு தேசிய விருது கிடைத்த சந்தோஷம்” என்கிறார் இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர். படம் வரட்டும்.. பார்க்கலாம்.

Comments