Simba Movie Audio Launch Stills! தமிழ் ராக்கர்ஸ் இணையத்தை மறைமுகமாக சாடிய விஷால்!!!


Tags :  Simba Audio Release Gallery, Simba Songs Launch Event Stills, Simba Movie Audio Release Photos, Simba Audio CD Launch Pictures, Simba Audio Release Function images.
 
சிம்பா' இசை வெளியீட்டு விழாவில், தமிழ் ராக்கர்ஸ் இணையத்தை மறைமுகமாக சாடி விஷால் பேசினார்.
















































பரத், பிரேம்ஜி, பானு, ஸ்ரீமேகரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'சிம்பா'. அரவிந்த் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். சிவனேஸ்வரன் தயாரித்துள்ளார்.
 
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் விஷால், மிஷ்கின் உள்ளிட்ட பல திரையுலகினர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
 
இவ்விழாவில் விஷால் பேசியதாவது "எப்போதுமே தடைகளைத் தாண்டி ஒரு படம் வந்தால் கண்டிப்பாக ஜெயிக்கும். இப்படம் தடைகளைத் தாண்டி வருகிறது. ஆகையால் கண்டிப்பாக ஜெயிக்கும். 'சிம்பா' ஏப்ரல் வெளியீடு என்றார்கள், தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிந்தவுடன்தான் வரும். ஆகையால் 2 வாக்குறுதிகள் இப்போதே இப்படக்குழுவுக்கு சொல்லிக் கொள்கிறேன்.
 
'சிம்பா' கண்டிப்பாக இணையதளத்தில் படம் வெளியாகி பாதிக்கப்படாது. அப்படத்தை வெளியிடும் இணையதளத்தின் பெயரை குறிப்பிட்டு விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை. நீயா, நானா என பார்த்துக் கொள்ளலாம். அதே போல் இப்படத்துக்கு ஒரு நல்ல வெளியீட்டு தேதி அமைத்துக் கொடுப்போம். இந்த தயாரிப்பாளர் மறுபடியும் ஒரு படம் கண்டிப்பாக எடுப்பார். ஒரு படம் எடுத்தோம், சென்றோம் என இருக்க மாட்டார்.
 
விஷால் சந்திரசேகரின் இசையைக் கேட்டுள்ளேன். ஆனால் அவரோடு இணைந்து பணிபுரிந்ததில்லை. விரைவில் அவரோடு பணிபுரிய வேண்டும். இப்படத்தின் கதைகளத்துக்கு என்ன தணிக்கை கிடைக்கும் என்று தெரிந்திருக்கும். இதனை தயாரித்துள்ள தயாரிப்பாளரின் தைரியத்தைப் பாராட்டுகிறேன். தமிழ் திரையுலகில் விஜய்க்குப் பிறகு சிறப்பாக நடனமாடக்கூடியவர் பரத்தான். அவருக்கு கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்" என்று பேசினார் விஷால்.

Comments