சினிமா பாரடைஸ் மற்றும் சரண் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஜெயிக்கிற குதிரை.
இந்த படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகிகளாக டிம்பிள் சோப்டே, சாக்சி அகர்வால், அஸ்வினி ஆகியோர் நடித்துள்ளனர்.
மற்றும் ஜெயப்பிரகாஷ், ‘தலைவாசல்’ விஜய், கோவை சரளா, சித்ரா லட்சுமணன், லிவிங்ஸ்டன், ரமேஷ் கண்ணா, மதன்பாப், யோகி பாபு, படவா கோபி, டி.பி.கஜேந்திரன், பாண்டு, ஏ.எல்.அழகப்பன், ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, தீபா ராமானுஜம், வையாபுரி, பவர்ஸ்டார், ஆதவன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஆஞ்சி. இசை – கே.ஆர்.கவின் சிவா, படத் தொகுப்பு – ரஞ்சித்குமார், கலை – மணி கார்த்திக், சண்டை பயிற்சி – தளபதி தினேஷ், நடனம் – கூல் ஜெயந்த், மக்கள் தொடர்பு – மௌனம் ரவி, தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.எம்.சேகர், தயாரிப்பு நிர்வாகம் – லியாகத், தயாரிப்பு – D.R.திரேஜா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஷக்தி N.சிதம்பரம்.
படம் பற்றி இயக்குநர் ஷக்தி N.சிதம்பரம் பேசும்போது, “ஜெயிக்கிறவனை மட்டும்தான் இந்த உலகம் மதிக்கும். நீ நல்லவனா, கெட்டவனா என்று பார்க்காது. நீ ஜெயிச்சவனா என்றுதான் பார்க்கும்.
அப்படியான இந்த உலகில் நாயகன் ஜீவன் ஒரு விஷயத்தில் வெற்றியடைவதற்காக எந்த வழியை தேர்ந்தெடுத்து வெற்றி பெறுகிறார் என்பதை காமெடி, செண்டிமெண்ட் கலந்து சொல்லியிருக்கிறோம்.
Comments
Post a Comment