தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால் அணி, நேற்று பிரசாரத்தை
துவங்கியது.தயாரிப்பாளர் சங்க தேர்தல், வரும் ஏப்., 2ல், சென்னை
அண்ணாநகரில் நடக்கிறது. விஷால், கேயார் ஆகியோர் அணிகள் உள்ளிட்ட, ஐந்து
அணியினர் போட்டியிடுகின்றனர்.
நடிகர் சங்க தேர்தலில், 'பாண்டவர் அணி' என்ற
பெயரில் போட்டியிட்ட விஷால், தயாரிப்பாளர் சங்க தேர்தலில், 'நம்ம அணி'
என்ற பெயரில் போட்டியிடுகிறார்.
ஓய்வூதியம், வீட்டுமனைப் பட்டா,
'சாட்டிலைட்' உரிமம் போன்ற பல தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஷால்,
நேற்று முதல் தீவிர பிரசாரத்தில் இறங்கினார். வடபழனியில்,
தயாரிப்பாளர்களின் வீடுகளுக்கு சென்ற விஷால், மிஷ்கின் உள்ளிட்டோரை
சந்தித்து, ஆதரவு சேகரித்தார்.
Comments
Post a Comment