முழுநீள காமெடி படத்தின் கதாநாயகியாக காஜல் அகர்வால்!!!

இப்போதிருக்கும் நடிகைகளில் காமெடி ஓரளவுக்கு யாருக்கு நன்றாக ஒர்க் அவுட் ஆகிறதென்று பார்த்தால் அந்த லிஸ்ட்டில் காஜல் அகர்வாலை முதல் இடத்தில் வைக்கலாம். ஏற்கனவே துப்பாக்கி, ஜில்லா, ஆல் இன் ஆல் அழகுராஜா உட்பட சில படங்களில் அதை காஜல் அகர்வால் நிரூபித்தும் இருக்கிறார்..
 அதுதான் தான் இப்போது அவரை முழுநீள காமெடிப்படம் ஒன்றிற்கு கதாநாயகியாக தேர்ந்தெடுக்க ஒரு இயக்குனரை தூண்டிவிட்டுள்ளது. அந்த இயக்குனர் வேறு யாருமல்ல… ‘யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’ படங்களை இயக்கிய டீகே தான்.. தான் அடுத்ததாக இயக்கவுள்ள டார்க் காமெடி படத்தில் காஜல் அகர்வாலை நடிக்க வைப்பதற்கு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம் டீகே.

Comments