தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் சங்கத்திற்கான 2017-2019-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஏப்ரல் 2-ம் தேதியன்று நடைபெறவுள்ளது.
ஒரு தலைவர், 2 கவுரவச் செயலாளர்கள், 2 துணைத் தலைவர்கள், 1 பொருளாளர், 18 செயற்குழு உறுப்பினர்கள் கொண்ட நிர்வாக்க் குழு இத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளது.
இந்த்த் தேர்தலை நடத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரனை நியமித்துள்ளது. இவர் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் குழுதான் தேர்தலை நடத்தப் போகிறது.
தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இத்தேர்தலில் 3 அணிகள் போட்டியிடுகின்றன. முன்னாள் தலைவர் கே.ஆர். தலைமையில் ஒரு அணி, தற்போதைய பொருளாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணி, கூடுதலாக நடிகர் விஷால் தலைமையிலும் ஒரு அணியாக நிற்கிறார்கள்.
முன்னாள் தலைவரான கோதண்டராமன் என்னும் கே.ஆர்., ‘தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களின் எழுச்சி கூட்டணி’ என்கிற பெயரில் ஒரு அணியை உருவாக்கியிருக்கிறார்.
இந்தக் குழுவில் கே.ஆர். தலைவர் பதவிக்கும், எஸ்.ஏ.சந்திரசேகர் பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். கெளரவ செயலாளர்கள் பதவிக்கு எஸ்.கதிரேசனும், ஏ.எல்.அழகப்பனும் போட்டியிடுகின்றனர். துணைத் தலைவர்கள் பதவிக்கு ஏ.எம்.ரத்னமும், பி.டி.செல்வக்குமாரும் போட்டியிடுகின்றனர்.
செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு L.M.M.K. முரளிதரன், சத்யஜோதி தியாகராஜன், அன்பாலயா பிரபாகரன், மனோஜ் குமார், பிரமிட் நடராஜன், சித்ரா லட்சுமணன், விஜயகுமார், கஃபார், H.முரளி, சோழா பொன்னுரங்கம், V.A.துரை, செந்தில்நாதன், K.முருகன், ராஜா, விஸ்வா சுந்தர், ராஜா சிற்பி கே.கே., சந்திரசேகர், ஈஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
சங்கத்தின் தற்போதைய செயலாளர்களில் ஒருவரான ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகிறது.
இவருடைய அணியில் தலைவர் பதவிக்கு ராதாகிருஷ்ணனும், கவுரவ செயலாளர்கள் பதவிக்கு சிவசக்தி பாண்டியன், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், துணைத் தலைவர்கள் பதவிக்கு கே.ராஜன், சுரேஷ் காமாட்சி, பொருளாளர் பதவிக்கு விஜய முரளி ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு அழகன் தமிழ்மணி, வி.சி.குகநாதன், கோவை தம்பி, கே.பாலு, வி.ஞானவேல், எம்.ஏ.சுப்பையா, பி.பழனிவேல், பி.ஹரிராஜன், டி.ஸ்ரீகாந்த், சிவாஜி பிலிம்ஸ் குமார், ஆர்.பாலாஜி, கே.திருஞானம், ஜி.எம்.டேவிட்ராஜ், ஏ.பி.சிவயோகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மூன்றாவதாக வெற்றி பெற்றே தீருவோம் என்கிற கங்கணத்துடன் நடிகர் விஷால் தலைமையில் ஒரு டீமும் களம் புகுந்துள்ளது.
இந்த டீமில் விஷால் தலைவர் பதவிக்கும், துணைத் தலைவர்கள் பதவிக்கு பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ்மேனன், கவுரவ செயலாளர்கள் பதவிக்கு மிஷ்கின், ஞானவேல்ராஜா, பொருளாளர் பதவிக்கு எஸ்.ஆர்.பிரபு ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் தவிர தற்போதைய செயலாளரான டி.சிவாவும், கலைப்புலி ஜி.சேகரனும் தலைவர் பதவிக்கு சுயேச்சையாக நிற்கின்றனர். பொருளாளர் பதவிக்காக பாபு கணேஷும், கவுரவ செயலாளர் பதவிக்காக மன்ன்னும் சுயேச்சையாக நிற்கின்றனர்.
தேர்தல் வரும் ஏப்ரல் 2-ம் தேதியன்று சென்னை அண்ணா நகரில் இருக்கும் கந்தசாமி கல்லூரியில் காலை 7.45 மணி முதல் நடைபெறும்.
காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரையிலும் வாக்குகள் பதியப்படும்.
மாலை 5 மணிக்கு மேல் வாக்குகள் எண்ணப்படும். முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படும். அப்போதே வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
Comments
Post a Comment