சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘ரெமோ’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சிவகார்த்திகேயன் நடிக்கும் இரண்டு படங்களை தயாரிக்கிறது.
அதில் முதல் படமாக மோகன் ராஜா இயக்கும் படத்தை தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், பிரகாஷ் ராஜ், பஹத் பாசில், சினேகா, ரோகிணி, சதிஷ், தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கவிருக்கின்றனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற நவம்பர் மாதம் 11-ந் தேதி தொடங்கப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Comments
Post a Comment