சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கியுள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் படப்பிடிப்பு ‘தள்ளி போகாதே’ பாடல் தவிர மீதி அனைத்தும் முடிந்துவிட்டது. இந்நிலையில் சிம்புவுக்கும் கவுதம் மேனனுக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இந்த பாடல் இல்லாமலேயே படம் வெளியாகும் என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போது இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதால் ‘தள்ளி போகாதே’ பாடல் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக சிம்பு, கவுதம்மேனன், மஞ்சிமா மோகன் உள்பட படக்குழுவினர் பாங்காங் சென்றுள்ளனர்.
இந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் இந்த பாடல் துருக்கியில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ‘தள்ளிப்போகாதே’ பாடலுடன் இந்த படம் வரும் 30ஆம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment