டோனியால் கிழிந்த ஷாருகானின் லுங்கி!!!

Friday, January 15, 2016
சென்னை:தனது திரைப்படத்தில் பாடல் ஒன்றில் லுங்குக் கட்டிக்கொண்டு “லுங்கி டான்ஸ்” ஆடிய ஷாருக்கான், அந்த பாடலையும், தனது லுங்கு நடனத்தையும் இந்தியாவின் பட்டி தொட்டியெல்லாம் பரப்பினார். இதையடுத்து, ஆட்டம் பாட்டம் என்று கலை கட்டும் விழாக்களில், லுங்கி டான்ஸ் நிச்சயம் என்று இருந்தது.

இந்த நிலையில், ஷாருக்கானின் லுங்கி டான்ஸை ஓரம் கட்டும் விதத்தில், இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி, வேட்டி டான்ஸ் ஒன்றை ஆடியுள்ளார். அதுவும் பிரபு தேவாவுடன் சேர்ந்து.
பொங்கலுக்கு புதிதாக அறிமுகமாகியுள்ள டி.வி.எஸ் நிறுவனத்தின் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக் விளம்பரத்திற்காக இந்த வேட்டி டான்ஸை டோனி ஆடியுள்ளார்.
பிரபு தேவாவுடன் டோனி சேர்ந்து ஆடியுள்ள இந்த வேட்டி டான்ஸ், அனைத்து மொழிகளிலும் பெரும் வரவேற்பு பெற்று வருவதால், ஷாருகானின் லுங்கி கிழிந்துவிட்டது. 

Comments