Thursday, January 21, 2016
சென்னை:கேரளாவில் இசைப் பள்ளி தொடங்குவதற்காக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, 5
ஏக்கர் நிலம் உடனே ஒதுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி
அறிவித்துள்ளார்.
கேரள சுற்றுலா துறை சார்பில் ஆண்டு தோறும் ‘நிசாகந்தி’ நடத்தப்படும்,
நடன இசை விழாவில், சாதனையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த
ஆண்டுக்கான சாதனையாளர் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது.
நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நடன இசை நிகழ்ச்சியின் தொடக்க
விழாவில் இளையராஜாவுக்கு, முதல்வர் உம்மன்சாண்டி விருது வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய உம்மன்சாண்டி, “இளையராஜாவுக்கு நிசாகந்தி விருதை
வழங்குவதன் மூலம் கேரளம் பெருமை கொள்வதுடன் புகழின் உச்சிக்கே சென்று
விட்டது. கேரளாவில், இளையராஜா சங்கீத அகாடமி தொடங்க, அரசு சார்பில் நிலம்
தருவதாக கடந்த 1990-ம் ஆண்டு வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. 25 ஆண்டுகளுக்கு பின் அந்த
வாக்குறுதி நிறைவேற்றப்பட உள்ளது. கேரளாவில், இளையராஜா சங்கீத அகாடமி
தொடங்குவதற்கு 5 ஏக்கர் நிலம் அரசு சார்பில் உடனே வழங்கப்படும் என்று உறுதி
அளிக்கிறேன்” என்று தெரிவித்தார்.
Comments
Post a Comment