Saturday, January 16, 2016
சென்னை:சில நேரங்களில் பிரிவுகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது.. அதிலும் சினிமா கலைஞர்களுக்குள் ஏற்படும் பிரிவானது அவர்களை மட்டுமின்றி, சில நேரங்களில் ரசிகர்களை கூட வருத்தப்படவைத்துவிடும்.. அப்படித்தான் கடந்த காலங்களில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது ஆஸ்தான இயக்குனரான கௌதம் மேனனுடன் மனவருத்தம் ஏற்பட்டு பிரிந்தார்.

ஆனால் எப்படி ஒரு சிறு பிரிவுக்குப்பின் கடந்த வருடத்தில் கௌதம் மேனனுடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் இணைந்தாரோ, அதேபோல சுமார் 12 வருட இடைவெளிக்குப்பின் தனது நண்பர் இயக்குனர் ஹரியுடன் ‘S-III’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ்.
ஹரியின் இரண்டாவது படமான ‘சாமி’யில் அவருடன் இணைந்து சூப்பர்ஹிட் பாடல்களை தந்த ஹாரிஸ், அதன்பின் கோவில், அருள் என தொடர்ந்து ஹரியுடன் பயணித்தார். ஆனால் சில காரணங்களால் அந்த கூட்டணி மேற்கொண்டு தொடராமலே நின்றுவிட்டது.. இப்போது அந்த கூட்டணிக்கு சிங்கம் படத்தின் மூன்றாம் பாகத்தின் மூலம் புத்துயிர் கொடுத்துள்ளார்கள் இருவரும்.
Comments
Post a Comment