தமிழ்சினிமாவில் மல்டி ஸ்டாரர் படம் என்பது அரிதிலும் அரிதாகத்தான் வரும்.. மணிரத்னம், ஷங்கர் போன்றவர்கள் இந்த முயற்சியில் இறங்கும்போது அது எளிதாக கைகூடும்.. அப்படித்தான் 12 வருடங்களுக்கு முன்பு, முன்னணி நடிகர்களான சூர்யா, மாதவன், சித்தார்த் என்கிற மூவர் கூட்டணியில் ‘ஆயுத எழுத்து’ என்ற படத்தை இயக்கினார் மணிரத்னம்..
அதன்பின் அந்த மூவரும் தனித்தனியாக வெவ்வேறு பாதைகளில் பயணித்தவர்கள், நேற்று மாதவன் நடித்துள்ள ‘இறுதிச்சுற்று’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஒன்று கூடினார்கள்.. 12 வருடம் கழித்து ஒன்றாக காட்சியளித்த இந்த மூவரையும் பார்த்து விழாவிற்கு வந்த வி.ஐ.பிகள் முதல் ரசிகர்கள் வரை ஆச்சர்யத்துடன் ரசித்தனர்.
Comments
Post a Comment