இளையராஜாவுடன் மீண்டும் இணையும் கமல்!!!

Sunday, December 13, 2015
Chennai:காலமாற்றத்தால் சில கூட்டணிகள் எந்தவித விருப்பு வெறுப்பும் இல்லாமல் பிரிவதும், புதியவர்களுடன், இளைஞர்களுடன் கைகோர்ப்பதும் சகஜமான ஒன்றுதான். அந்த வகையில் இளையராஜாவும் கமலும் இணைந்து பணிபுரிந்து கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. கடைசியாக இந்த இருவர் கூட்டணியில் வெளியான படம் மும்பை எக்ஸ்பிரஸ் தான்..

இடையில் ஒரு சில இசையமைப்பாளர்களுடன் பயணித்த கமல், கடந்தா மூன்று வருடங்களாக இசையமைப்பாளர் ஜிப்ரனை தனது ஆஸ்தான இசையமைப்பாளர் ஆக்கிவிட்டார். தற்போது மீண்டும் இளையராஜாவுடனான நட்பை புதுப்பிக்கும் வகையில் தனது புதிய படத்தில் இளையராஜாவுடன் கூட்டணி அமைக்கிறார் கமல்.
இந்தப்படத்தை இயக்குவது மலையாள இயக்குனரான டி.கே.ராஜீவ் குமார். 1989ல் மலையாளத்தில் கமல் நடித்த சாணக்யன் படத்தை இயக்கியவர் இவதான். இவர் 26 வருடங்கள் கழித்து கமலுடன் கைகோர்ப்பதுபோல, நடிகை அமலாவும் 26 வருடங்கள் கழித்து இந்தப்படத்தின் மூலம் கமலுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments