சிம்புவுடன் வேலை பார்ப்பது கஷ்டம்: மஞ்சிமா மோகன்!!!

Sunday, December 13, 2015
Chennai:கேரளாவில் இருந்து தமிழுக்கு வந்து முன்னணி இடத்தை பிடிக்கும் மலையாள நடிகைகள் பட்டியலில் ‘ஒரு வடக்கன் செல்பி’ புகழ் மஞ்சிமா மோகனும் இணைந்துள்ளார் தானே.. கௌதம் மேனன் இயக்கிவரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தமிழில் தனது வரவை அழுத்தமாக அறிவிக்க இருக்கிறார்.

சிம்புவுடன் நடித்த அனுபவங்கள் பற்றி இவர் பகிர்ந்து கொள்கையில்,”சிம்பு ஷூட்டிங் வந்த அன்றிலிருந்தே தனது கலாட்டாக்களை ஆரம்பித்துவிட்டார். முக்கியமான காட்சிகளில் நான் நடிக்க இருக்கு சமயத்தில் எப்படியாவது எனக்கு சிரிப்பை வரவழைத்துவிடுவார்… ஆனால் பதிலுக்கு நான் என்னதான் முயற்சித்தாலும் அவரது காட்சிகளின்போது அவரது சீரியஸ்நெஸ் கொஞ்சம் கூட குறையாது.. அவருடன் வேலைபார்ப்பது கஷ்டம்” என ஜாலியாக கூறியுள்ளார் மஞ்சிமா.

Comments