Tuesday, December 15, 2015
Chennai:தேவையில்லாத நேரத்தில் தேவையில்லாமல் செய்த வேலையாக ‘பீப் சாங்கை வெளியிட்டு வெகுஜனங்களின் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளார்கள் சிம்புவும் அனிருத்தும். இவ்வளவு மோசமான வார்த்தைகளில், மிக மோசமாகவா பெண்களை விமர்சித்து பாட்டெழுதுவது என மாதர்சங்கத்தினர் எதிர்ப்பு குரல் எழுப்பயதொடு சிம்புவின் மீது காவல் நிலையத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்..

சிம்புவோ இந்தப்பாடல் தன்னுடையது இல்லை என்பதை மறுக்கவில்லை. மாறாக, தனக்கு பிடித்தபடி பாடல் எழுதுவது தனது சொந்த விஷயம் என்றும் தனது விஷயத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என்றும் விட்டேத்தியாக விளக்கம் கூறியது எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றியது போலத்தான் ஆகிவிட்டது..
இந்த நிலையில் அமெரிக்காவில் இருக்கும் அனிருத், இந்தப்பாடலுக்கு தான் இசையமைக்கவில்லை என்றும் தனக்கும் இந்தப்பாடலுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறியுள்ளார்.. ஆனால் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரோ காவல்துறைக்கு அளித்துள்ள புகாரில், இந்தப்பாடலுக்கு இசையமைத்தது அனிருத் தான் என குறிப்பிட்டுள்ளார்.. இதில் யார் சொல்வது உண்மை..? சீக்கிரம் வெளியே வரும்
Comments
Post a Comment