என் வீட்டு பாத்ரூமில் என்ன வேண்டுமானாலும் செய்வேன் - ஆவேசமடைந்த சிம்பு!!!

Sunday, December 13, 2015
Chennai:சமீபகாலமாக ஆன்மீகம், அன்பு என்று சொற்பொழிவு ஆற்றாத குறையாக ரொம்பவே அமைதியாக இருந்த சிம்பு தற்போது ‘பீப்’ பாடல் சர்ச்சையால் மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘பீப் சாங்’ என்ற பெயரில் அனிருத் இசையில் சிம்பு பாடிய பாடல் ஒன்று இணையத்தில் வெளியானது. அப்பாடல் வரிகள் பல கொச்சையாகவும், பச்சையாகவும் இருந்தன. இதனால் இந்த பாடலுக்கு இளைஞர்கள் உட்பட பல
ர் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் சிம்புக்கு எதிராக கண்டன கருத்துக்கும் வெளியாகி வருகிறது.
இதற்கிடையில், அப்பாடல் சிம்பு பாடியதா இல்லையா, என்ற ஒர் ஆராய்ச்சி நடைபெற, அப்பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்ற தகவல் மட்டும் உறுதியானது.
தற்போது இந்த பீப் பாடல் குறித்து தனது விளக்கத்தை கொடுத்துள்ள சிம்பு, “'பீப் பாடல்' வெளியானது பற்றி பலரும் என்னிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அப்பாடலை முதலில் நான் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. நானும் அனிருத்தும் இணைந்து பல்வேறு தளங்களில் சுமார் 150 பாடல்களை தயார் செய்து வைத்திருக்கிறோம். அதில் இருந்து ஒரு பாடலை திருடி வெளியிட்டு இருக்கிறார்கள்.
முதலில் அப்பாடல் ஏதாவது ஒரு படத்திலோ, ஆல்பத்திலோ இடம்பெறவில்லை. அது இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அப்பாடல் குறித்து ஒரு சிலர் நன்றாக இருக்கிறது என்றும், பலரும் அதற்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
நான் ஒரு கேள்வி கேட்கிறேன்... அதே இணையத்தில் தானே போர்ன் (ஆபாச வீடியோ) வீடியோக்களும் இருக்கிறது. தேவை என்றால் தானே போய் பார்க்கிறீர்கள். அதேபோல் தான் பாடல் பிடிக்கவில்லை என்றால் கேட்காதீர்கள்.
நான் எனது வீட்டின் படுக்கையறையிலும், பாத்ரூமிலும் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதை எட்டிப் பார்க்கும் அதிகாரம் நான் யாருக்கும் அளிக்கவில்லை. என்னைக் கேள்விக் கேட்பவர்கள் வீடுகளில் நான் கேமராவை வைத்து அவர்கள் பண்ணும் விஷயங்களைப் பார்த்து "நீங்கள் ஏன் இப்படி எல்லாம் பண்ணுகிறீர்கள்" என்று கேட்டால் என்னவாகும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சில வருடங்களுக்கு முன்பு அன்பை பரிமாறுங்கள் என்று ஒரு பாடல் வெளியிட்டேன். அப்போது எனக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் எல்லாம் எங்கே இருந்தார்கள். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்களா? யாருடைய கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது. அதேபோல், என்னுடைய பணியைப் பற்றி குறைச் சொல்பவர்கள் யாருக்கும் நான் பதில் வேண்டிய அவசியமில்லை" என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

Comments