Wednesday, November 4, 2015
Chennai:Tags : Ennul Aayiram Media Meet Stills, Ennul Aayiram Press Meet Gallery Pics, Ennul Aayiram Press Meet images, Ennul Aayiram Team Meet Media Peoples Pictures, Ennul Aayiram Press Meet Event Photos
Chennai:Tags : Ennul Aayiram Media Meet Stills, Ennul Aayiram Press Meet Gallery Pics, Ennul Aayiram Press Meet images, Ennul Aayiram Team Meet Media Peoples Pictures, Ennul Aayiram Press Meet Event Photos
பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள நடிகர் டெல்லி கணேஷ், தனது மகனை ஹீரோவாக்குவதற்காக, அவர் தயாரிப்பாளராகியுள்ளார்.
மகா என்ற அவரது மகன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்திற்கு ‘என்னுள் ஆயிரம்’
என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நாயகியாக சில மலையாளப்
படங்களில் நடித்த மரீனா நடிக்கிறார். கிருஷ்ணகுமார் என்ற புதுமுக இயக்குநர்
இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குநர் விஜயிடம் உதவி இயக்குநராக
பணியாற்றியுள்ளார். கோபி சுந்தர் இசையமைக்கும் இப்படத்திற்கு, அதிசயராஜ்
ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படம் குறித்து நடிகர் டெல்லி கணேஷ் கூறுகையில், “என் மகனை ஹீரோ ஆக்க
வேண்டும் என்பதற்காக பல கதைகளை கேட்டேன். அப்போது இயக்குனர் ஏ.எஸ்.விஜய்
இடம் உதவி இயக்குனராக 6 படங்களில் பணியாற்றியுள்ள கிருஷ்ணகுமார், எனது
மகனிடம் ஒரு கதையை கூறி இருக்கிறார். அது அவனுக்கு மிகவும் பிடித்து
இருந்தது.
நானும் அந்த கதையை கேட்டேன் என் மகன் நடிப்பதற்கு பொருத்தமாக இருக்கும்
என்பதை தெரிந்து கொண்டேன். அந்த கதை வித்தியாசமாக இருந்தது. எனவே, அதை
படமாக எடுத்து என் மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்ய நினைத்தேன்.
என் மகனை வைத்து சிலர் படம் தயாரிக்க முன் வந்தனர். என்றாலும்
டைரக்டர்களையும் அழைத்து வந்தனர். எனவே நானே தயாரிப்பது என்று முடிவு
செய்தேன். படப்பிடிப்பின் போது நேரில் சென்று பார்த்தேன். அவர் சிறப்பாக
நடிக்கிறார். இந்த படத்தை கதையை சொன்ன கிருஷ்ணகுமார் இயக்குகிறார்.
அவருக்கு ஜோடியாக மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்த மரீனா
நடிக்கிறார். இவர் தனது தாயாருடன் என் வீட்டில் உள்ள கெஸ்ட்ஹவுசில் தங்கி
இருந்து நடித்தார். படப்பிடிப்பு முடிந்ததும் தனது தாயாருடன் வந்து
என்னையும், என் மனைவியையும் காலைத் தொட்டு வணங்கி மரியாதை செய்தார்.
இந்த படத்தில் பொருத்தமான வேடம் அமையாததால் நான் நடிக்கவில்லை” என்று தெரிவித்தார்.
Comments
Post a Comment