மாடுகள் மீது சிறு கீறல் போட்டாலும் அவன் ஆண் மகனே அல்ல : கமல்ஹாசன்!!!

Tuesday, November 3, 2015
Chennai:மாடுகள் மீது சிறு கீறல் போட்டாலும் அவன் ஆண் மகனே அல்ல, என்று நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
பிரபல புகைப்படக் கலைஞரான ஜெ.சுரேஷ், பல ஆண்டுகளாக ஜல்லிக் கட்டு போட்டிகளில், தான் எடுத்த புகைப்படங்களின் தொகுப்புகளை ‘வீர விளையாட்டு ஜல்லி கட்டு’ என்ற பெயரில் கண்காட்சியாக வைத்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள லலித் கலா அகாடெமியில்  (நவ.02) முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியின் துவக்க விழா இன்று காலை நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்துக்கொண்டு, கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “ஜல்லிக்காடு போட்டி என்பது வீரவிளையாட்டு என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனால், சில காரணங்களினால் தற்போது இப்போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில், என்ன நடக்கிறது என்பது தெரியாத நேரத்தில், கத்தியால் மாடுகளை குத்தி, பிறகு அவற்றை மாமிசமாக சமைத்து சாப்பிடுவது போல இங்கு நடப்பதில்லை. ஜல்லிக்கட்டு போட்டிகளில், பங்கேற்கும் மாடுகள் மீது சிறு கீறல் விழுந்தாலும், போட்டியில் பங்கேற்பவர்களை ஆண் மகனே அல்ல, என்று சொல்லுவார்கள்.
தமிழர்களின் வீரத்தை தெரிவிக்கும் ஒரு போட்டியாக மட்டும் இன்றி, அமைதியான சூழ்நிலையில் வரும் எதிர்ப்புகளை எதிர்க்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவும் இப்போட்டியை பார்க்கிறோம். காளை அடக்குதல் என்பதை விட இப்போட்டிக்கு மற்றோரு பெயர் உண்டு. அது தான் ஏர் தழுவதுல். அதாவது, மாடு மீது தழுவி அதை அடக்குவது.
மூததையாரால் தொடங்கப்பட்ட இந்த விளையாட்டுக்கு உள்ள தடையை நீக்கி, மீண்டும் தமிழகத்தில் ஜல்லிக் கட்டு போட்டிகள் தொடர வேண்டும், என்று பலர் ஆசைப்படுவதைப் போல நானும் ஆசைப்படுகிறேன்” என்று தெரிவித்தார்.

Comments