அஜித் நடிப்பு குறித்து விமர்சித்த இயக்குநர் சிவா!!!

Friday, November 6, 2015
Chennai:அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேதாளம்’ படம் தீபாவளியன்று வெளியாகிறது. தமிழக ரசிகர்கள் மட்டும் இன்றி பக்கத்து மாநிலமான கேரளத்திலும் இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை அஜித் படம் தமிழகத்தில் மட்டுமே எதிர்ப்பார்க்கப்பட்டு வந்த நிலையில், வேதாளம் பல மாநிலங்களில் பறந்துக்கொண்டிருக்கிறது.

பப்ளிசிட்டிக்காக அஜித்தின் மேனஜெர் செய்யும் திட்டம் தான் இந்த எதிர்பார்ப்பு வதந்திகள், என்று ஒரு சாரார் புகார் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ‘வேதாளம்’ படத்தின் இயக்குநர் சிவா, சமீபத்தில் சில ஊடகங்களுக்கு மட்டும் அளித்த பேட்டியில், அஜித் ‘வேதாளம்’ படத்தில் தான் நடித்துள்ளார். வேறு  எந்த படத்திலும் அவர் நடிப்பில் ஸ்கோர் செய்ததில்லை, என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சிவாவின் இந்த பதிலை வைத்துப் பார்த்தால், அஜித் இதுவரை எந்த படத்திலையும் நன்றாக நடிக்க வில்லை என்றும், இந்த படத்தில் தான், அவர் சற்று நடித்திருக்கிறார், என்று சொல்வது போல தான் தெரிகிறது.
சரி படம் என்ன பேய் படமா? என்று அவரிடம் கேட்க, “பேய் படமும் இல்லை ரவுடி படமும் இல்லை, இது முழுக்க முழுக்க அண்ணன் தங்கை பாசப் படம்” என்று கூறுகிறார்.

Comments