நடிகை அஷ்னா சவேரியை திருமணம் செய்துக்கொண்டார் சந்தானம்!!!?

Thursday, November 5, 2015 Chennai: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘இனிமே இப்படித்தான்’ என இரண்டு படங்களில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தவர் அஷ்னா சவேரி. இவருக்கும் நடிகர் சந்தானத்திற்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால், இதை மறுத்த சந்தானம் இது வெறும் புரளி என்று அறிவித்தார்.


பிறகு இந்த கிசிகிசு ஓய்ந்த நிலையில் தற்போது, இவர்கள் இருவர் குறித்து திருமணம் தகவல் வெளியாகியுள்ளது.
அஷ்னா சவேரியை சந்தானம் திருமணம் செய்துக்கொண்டதாகவும், தற்போது இருவரும் திருப்பதியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல என்றாலும், தற்போது இந்த திருமண செய்தி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சந்தானத்திற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments