ஹன்சிகாவுடன் ஜோடி சேரும் விஜய் சேதுபதி!!!

Friday, November 6, 2015
Chennai:நயந்தாராவுடன் விஜய் சேதுபதி ஜோடி சேர்ந்த ‘நானும் ரெள்டி தான்’ படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப் பெற்றுள்ளது. நடிகர் தனுஷ் தயாரித்த இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 
 
இதற்கிடையில், மீண்டும் நயந்தாரா - விஜய் சேதுபதி ஜோடி, மீண்டும் ஒரு படத்தில் இணைவதாகவும், இந்த படத்தையும், ‘நானும் ரெளடி தான்’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், விஜய் சேதுபதி, தனது அடுத்த படத்தில் ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். மலையாளத்தில் வெற்றிப் பெற்ற ‘பிரேமம்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இப்படத்தில் மூன்று நாயகிகள். அதில் ஒருவராக ஹன்சிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்ற இரண்டு நாயகிகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இப்படத்தினை நடிகர் தனுஷ் தயாரிக்க, அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்குகிறாராம்.

Comments