Thursday, November 5, 2015
Chennai:* துரை செந்தில்குமார் இயக்கத்தில், நடிகர் தனுஷ், -நடிகை த்ரிஷா நடிக்கும் படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன. இதில், இரு வேடங்களில் தனுஷ் நடிக்கிறார். அண்ணன் தனுஷுக்கு த்ரிஷாவும், தம்பி தனுஷுக்கு ஷாம்லியும் ஜோடி. படையப்பா வில்லி நீலாம்பரியை துாக்கி சாப்பிடும்படி, த்ரிஷா ரோல் பலமாக இருக்கும் என, கூறப்படுகிறது.
Chennai:* துரை செந்தில்குமார் இயக்கத்தில், நடிகர் தனுஷ், -நடிகை த்ரிஷா நடிக்கும் படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன. இதில், இரு வேடங்களில் தனுஷ் நடிக்கிறார். அண்ணன் தனுஷுக்கு த்ரிஷாவும், தம்பி தனுஷுக்கு ஷாம்லியும் ஜோடி. படையப்பா வில்லி நீலாம்பரியை துாக்கி சாப்பிடும்படி, த்ரிஷா ரோல் பலமாக இருக்கும் என, கூறப்படுகிறது.
* நடிகர் அஜித் - சுருதிஹாசன் நடித்து, தீபாவளிக்கு திரைக்கு வரும், வேதாளம் படத்தின் முன்னோட்டம் இன்று வெளியாகிறது.
*
ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த நடிகை
அமலா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்த பின், திரையுலகை விட்டு
விலகி இருந்தார். சில மாதங்களுக்கு முன், தொலைக்காட்சி தொடர் ஒன்றில்
நடித்த அமலா, தற்போது, 26 ஆண்டுகளுக்கு பின், கமலுடன் ஜோடி சேர உள்ளார்.
இப்படத்தை மலையாள இயக்குனர், டி.கே.சஞ்சீவ்குமார் இயக்குகிறார்.
* நடிகர் கமல் - த்ரிஷா நடித்துள்ள,
துாங்காவனம் படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. அமெரிக்காவில் மட்டும், 102 தியேட்டர்களில் இப்படம் வெளியிடப்பட உள்ளது.
*
தமிழ் திரையுலகில் சிரிப்பு நடிகர்களுக்கு கடும் கிராக்கி
ஏற்பட்டுள்ளது. சிரிப்பு நடிகராக அறிமுகமான கவுண்டமணி, விவேக், சந்தானம்,
வடிவேலு உள்ளிட்ட பலர், கதாநாயகராக நடிக்கின்றனர்.
சந்தானம், வடிவேலு இடத்தை,
நடிகர்
சூரி நிரப்பி வருகிறார். சூரிக்கு இணையாக, வில்லன் கேரக்டரில் நடித்து
வந்த, 'மொட்டை' ராஜேந்திரன் சிரிப்பு நடிகராக, 'பிசி'யாக நடித்து
வருகிறார். சமீபத்தில், விஜய் நடிப்பில், அட்லி இயக்கும் படத்திற்காக
மொத்தமாக, 70 நாள், 'கால்ஷீட்' கொடுத்து
உள்ளார், மொட்டை ராஜேந்திரன். அத்துடன் தன் சம்பளத்தையும், நாள் ஒன்றுக்கு, ஒன்றரை லட்சம் ரூபாய்
என, உயர்த்தியுள்ளார்.
*
தனி ஒருவன் படத்திற்கு பின் ஜெயம் ரவி நடிக்கும் படம், மிருதன்.
'இப்படத்திற்குப் பின், பிரபுதேவா தயாரிப்பில், லட்சுமணன் இயக்கும்
படத்தில் நடிக்கிறேன். மற்றபடி, யார் படத்திலும் நடிக்க
ஒப்பந்தமாகவில்லை'
என, ஜெயம் ரவி, 'டுவிட்டரில்' தகவல் வெளியிட்டுள்ளார். மதராச பட்டினம்,
தெய்வத்திருமகள் படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய் இயக்கத்தில், ஜெயம் ரவி
நடிப்பதாக செய்தி பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது.
* விஜய் - எமி
ஜாக்சன் - சமந்தா நடிக்க, அட்லி இயக்கி வரும், விஜயின், 59வது படத்தில்,
வில்லனாக, இயக்குனர் மகேந்திரனும், நடிகர் சத்யராஜும் நடிக்கின்றனர்.
*
கபாலி படப்பிடிப்புக்காக மலேஷியா சென்றுள்ள ரஜினி, நேற்று அங்குள்ள முருகன் கோவிலுக்கு சென்று உள்ளார்.
*
நடிகர் சிவகார்த்திகேயன் - - கீர்த்தி சுரேஷ் நடிப்பில், புதுமுக
இயக்குனர் பாக்ய ராஜ்கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும், புதிய படத்தின்,
படப்பிடிப்பு, நவ., 2ல் துவங்கியது. நடன இயக்குனர் ராஜு சுந்தரத்துடன்,
பூந்தமல்லி அருகே பெரிய அரங்கு அமைத்து பாடல் காட்சி படமானது. அதை
தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயிலில் பாடல் காட்சி எடுக்கப்பட உள்ளது.
இப்பாடலை எழுதியிருப்பவர், நானும் ரவுடி தான் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
Comments
Post a Comment