Thursday, November 5, 2015
Chennai:திருப்பதியில் நடிகர் சந்தானமும் நடிகை ஆஷ்னா சாவேரியும் நேற்று ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதாக வெளியான செய்திக்கு, இருவரும் ட்விட்டர் வழியாக தங்கள் பதிலை அளித்துள்ளார்கள்.
Chennai:திருப்பதியில் நடிகர் சந்தானமும் நடிகை ஆஷ்னா சாவேரியும் நேற்று ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதாக வெளியான செய்திக்கு, இருவரும் ட்விட்டர் வழியாக தங்கள் பதிலை அளித்துள்ளார்கள்.
இனிமே இப்படித்தான் படத்துக்குப் பிறகு சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படத்தை லொள்ளுசபா இயக்குநர் ராம்பாலா இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக ஆஷ்னா சாவேரி. இவர் ஏற்கெனவே சந்தானத்துடன் இனிமே இப்படித்தான், வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
நேற்று காலை திடீர் என சந்தானம் குறித்து ஒரு செய்தி வெளிவந்தது. அவர் தன்னுடன் நடிக்கும் நடிகை ஆஷ்னாவை ரகசியமான முறையில் திருப்பதியில் திருமணம் செய்துகொண்டார் என்று அதற்கேற்ற ஒரு புகைப்படத்துடன் இணையத்தில் ஒரு வதந்தி வேகமாகப் பரவியது.
உண்மையில் வதந்தி உருவாகக் காரணம் என்ன?
திருப்பதியில் எதிர்பாராதவிதமாகத்தான் நடிகை ஆஷ்னா சந்தானத்தைச் சந்தித்துள்ளார். ஆஷ்னா தன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் திருப்பதி செல்வது வழக்கம். அப்போது அங்கு இயக்குநருடன் திருப்பதிக்கு வந்த சந்தானத்தை சந்திக்க நேர்ந்துள்ளது. சந்தானத்தைத் திருப்பதியில் பார்த்த நிருபர்கள் சிலர் அவரிடம் பேட்டி கேட்டுள்ளார்கள். சாமி கும்பிட வந்த இடத்தில் பேட்டியெல்லாம் வேண்டாம் என்று சந்தானம் மறுத்துள்ளார். அப்போது சந்தானம், ஆஷ்னாவை எடுத்த புகைப்படம் தான் பிறகு வதந்திக்கு முக்கியமாக காரணமாக அமைந்துவிட்டது.
ரகசியத் திருமணம் குறித்த வதந்திக்கு சந்தானம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியிருக்கிறார்.
என்னைப் பற்றிய செய்திகளைக் கேள்விப்பட்டேன். என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. சமீபத்தில் நான் கேட்ட சிறந்த நகைச்சுவை இதுதான். அனைவருக்குமான என் தீபாவளிப் பரிசு என்று ட்வீட் செய்துள்ளார்.
ஆஷ்னா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், சிங்கிள் அண்ட் ஹேப்பி என்று சூசகமாகப் பதில் அளித்துள்ளார்.
Comments
Post a Comment