பாபி சிம்ஹா - ரேஷ்மி ஜோடிக்கு திருமண நிச்சயதார்த்தம்!!!

Wednesday, November 4, 2015
Chennai:நடிகர் பாபி சிம்ஹாவும், நடிகை ரேஷ்மி மேனனும் ‘உறுமீன்’ படத்தில் இணைந்து நடித்தார்கள். இப்படத்தின் படப்பிடிப்பின் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து, இருவரும் திருப்பதியில் ரகசிய திருமணம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால், இதை மறுத்து இருவரும், தங்களது பெற்றோர்கள் தங்களது காதலுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டதாக தெரிவித்தார்கள்.
இந்த நிலையில், பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் திருமண நிச்சயதார்த்தம் இம்மாதம் 8ஆம் தேதி நடைபெற உள்ளது.இதில் குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்துகொள்ள உள்ளனர். அன்றைய தினம் திருமணத் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

Comments